எங்களை பற்றி
எங்களை பற்றி

இறை இணை திருமண தகவல் மையத்துக்கு அன்புடன் வரவேற்கிறோம்

தூய ஆவியாரின் வழிநடத்துதலோடு, தமிழ் கத்தோலிக்கர்கள் இறைவனின் ஆசீர்வாதமாக விளங்கும் ஒரு நல் வாழ்க்கைத் துணையைக் கண்டறிய உதவும் நோக்கில் இறை இணை திருமண தகவல் மையம் ஒரு திருத்தொண்டாக (சேவையாக) செயல்படுகிறது. கிறிஸ்தவ மதிப்பீடுகளில் வேரூன்றிய இத்தளத்தில், அருட்தந்தையர்கள் மற்றும் துறவியரால் சான்றளிக்கப்பட்ட, சரிபார்க்கப்பட்ட சுயவிவரங்களை நாங்கள் வழங்குகிறோம். உங்கள் தனிப்பட்ட எதிர்பார்ப்புகள், உணர்வுகள் மற்றும் விசுவாசத்தின் ஆழமான புரிதலோடு, உங்களின் திருமணப் பயணத்தில் உங்களை வழிநடத்துகிறோம். நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடும், அர்ப்பணிக்கப்பட்ட பணியாளர்களின் ஆதரவோடும், உங்களுக்கான வரனைத் தேர்ந்தெடுக்கும் அனுபவத்தை நாங்கள் எளிமையாகவும் நிறைவாகவும் மாற்றுகிறோம். நீங்கள் எங்கு வாழ்ந்தாலும், இறைவனின் ஒரே குடும்பமாக மனங்களை ஒன்று சேர்க்கிறோம்.

திட்டத் தலைவர்: அருட்பணி. யூஜின் புளோரன்ஸ் SDB

மென்பொருள் உருவாக்குநர்: ஜெரோம் செல்வராஜா

உருவாக்கக் குழு: ஸ்டாலின் ஜோசப், பிரித்தோ ஆண்டனி, ஸ்டெர்லின் ஆண்டோ

செயல்படுத்தும் குழு:

தொன் போஸ்கோ அலைகள் மீடியா

திருச்சி, தமிழ்நாடு.

முழு முகவரி: தொன் போஸ்கோ மீடியா, 3/121, காருண்யா நகர் சாலை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு - 620012.

தொலைபேசி எண்: 9585559594

மின்அஞ்சல்: info@iraiinaimatrimony.com

Don Bosco Matrimony
Our team Irai Inai — Don Bosco Alaihal Media team

Don Bosco Alaihal Media · Trichy, Tamil Nadu

இறை இசை - Irai Isai

பக்தி பாடல்களுக்காக உருவாக்கப்பட்ட இசை தளம். புதிய கிறிஸ்துமஸ் பாடல்கள், 3000+ பாடல்கள், முழு இறை அலைகள் பாடல்கள், Android, iOS, Web ஆகிய தளங்களில் கிடைக்கிறது.

புதிய பாடல்களை வெளியிடவும், உங்கள் பாடல்களையும் பதிவேற்றவும் பயன்படும் பக்தி முயற்சி.

இறைவார்த்தை இன்று II

Bible Diary App - திருப்பலி வாசகங்கள், சிந்தனை, புனிதர், தினம் ஒரு வாக்கு, அன்றாட ஸ்டேடஸ், செபங்கள், ஆசீர்வாத புத்தகம், பாடல்கள், Smart Liturgy Folder, Don Bosco Today இன்னும் பல...

இப்போது Android, iOS, Web ஆகிய மூன்று தளங்களிலும் கிடைக்கிறது.

இறையாசியுடன், அருட்தந்தை யூஜின் பிளோரன்ஸ் SDB